Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் மாதவன்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.‌

தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

Maara review: Madhavan-starrer is enjoyable | Entertainment News,The Indian  Express

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |