Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லால் சிங் சட்டா படத்தில் நடிக்கும் நாக சைதன்யா”…. எவ்வளவு சம்பளம் தெரியுமா…????

லால் சிங் சட்டா திரைப்படத்தில் நடிக்கும் நாக சைதன்யாவுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் தற்போது அமீர் கான் நடிக்கும் லால் சிங் சட்டா திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யா அமீர்கானின் தோழனாக நடித்திருக்கின்றார். முதலில் நாக சைதன்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால் நாட்கள் பிரச்சனையால் விஜய் சேதுபதி விலக அந்த கதாபாத்திரத்திற்கு நாக சைத்தன்யா ஒப்பந்தமானாராம்‌. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு நாகசைதன்யா வாங்கும் சம்பளம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு நாக சைதன்யாவுக்கு 6 கோடி சம்பளமாம். ஹீரோவாக நடிக்கும் அமீர்கானுக்கு 50 கோடி, ஹீரோயினாக நடிக்கும் கரீனா கபூருக்கு 8 கோடி, அமீர்கானின் அம்மாவாக நடிக்கும் மோனாவுக்கு 2 கோடி சம்பளம் என தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |