லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்நிலை படிப்பிற்கான விண்ணப்பம் ஆரம்பமாகி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையானது www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வருகின்ற 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் மாரியம்மாள் கூறியுள்ளார்.