ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்ம் பீகார் முன்னாள் முதல் அமைச்சருமான திரு லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், திரு. லாலு பிரசாத்க்கு கடந்த 2014ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 20% மட்டுமே தற்போது செயல்படுவதாகவும், எப்போது வேண்டுமானாலும் சிறுநீரகம் செயலிழந்து விடும் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.