பயங்கர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. இந்த பேருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போலாம்மா குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது திடீரென அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.
அதன்பிறகு பேருந்தில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் என்பவர் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.