Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. விபத்தில் சிக்கிய குஷ்பு…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

குஷ்பு பயணித்த கார் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே சென்ற சமயம் முன் சென்ற டேங்கர் லாரி மீது குஷ்பு பயணித்த கார் மோதியது. இதில் குஷ்புவுக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு கூறுகையில் “மேல்மருவத்தூர் அருகே விபத்து ஏற்பட்டது. உங்கள் ஆசியாலும் கடவுளின் தயவாலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனது வேல் யாத்திரையில் பங்கேற்பதற்கான எனது பயணத்தை தொடர உள்ளேன். காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றி உள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |