கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன் மலை சேராப்பட்டு அருகில் சீவாத்துமலை எனும் இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை மடக்கி போலீச சோதனை செய்தனர்.
அதில் 8 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் மொத்தம் 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்தி வந்த சேராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அஜித் குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த தோழன் மகன் பூபதி போன்றோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மினி லாரி, இருசக்கர வாகனம் மற்றும் 400 லிட்டர் சாராயம் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.