Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரியின் மீது மோதிய பேருந்து…. படுகாயம் அடைந்த 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய  விபத்தில் 3  பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவழியாக தூத்துக்குடியில் இருந்து நிலக்கரியை ஏற்றி  கொண்டு வந்த லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்  லட்சுமி காந்தன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று லாரி மற்றும் அரசு பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி  நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |