Categories
தேசிய செய்திகள்

லாட்டரி சீட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து….. பணம் பறித்த ஆசாமி….. பெரும் அதிர்ச்சி….!!!!

கேரளாவின் மேப்பாடியில் இரண்டு லாட்டரி விற்பனையாளர்களிடம் இருந்து லாட்டரியின் கலர் ஜெராக்ஸ் எடுத்து 6,000 ரூபாய் வாங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலர் ஜெராக்ஸ் என்பதால் அந்த டிக்கெட் போலியா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புகாரின் பேரில் மேப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைசியாக 2177 என்ற எண் கொண்ட லாட்டரியில் 2000 ரூபாய் கிடைத்தது. மேப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்கும் மூப்பைநாட்டில் வசிக்கும் ஒருவரிடமிருந்து லாட்டரியின் 2 வண்ண ஜெராக்ஸ் நகல்களை ரூ.4,000க்கு வாங்கினார். இதேபோல் மற்றொரு லாட்டரி விற்பனையாளர்களிடம் லாட்டரி சீட்டை கொடுத்து ரூபாய் 2000 வாங்கியுள்ளனர். இதுபோன்று பலரும் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |