கனடாவைச் சேர்ந்த நபருக்கு இரண்டு மில்லியன் டாலர் பரிசு லாட்டரியில் விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்
கனடாவில் உள்ள நனைமோ நகரத்தை சேர்ந்த பிராட் ரோவன் என்பவர் லாட்டரியில் ஒரு டாலர் பரிசை பெற்றார். அதனை வைத்து பிசி/49 லாட்டரியில் விளையாடியுள்ளார். அவர் விளையாடிய அந்த லாட்டரியில் அதிர்ச்சி தரும் வகையில் 2 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ. 14,79,62,300 பரிசு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது பணம் கிடைத்தது உறுதியானதும் அலுவலகத்தில் விடுப்பு தெரிவித்தேன். அதன்பிறகு எனக்கு கிடைத்த பணத்தை சென்று வாங்கி கொண்டேன். இதுபோன்ற பரிசு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. நானும் என் மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். பரிசு தொகையில் வீடு வாங்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார்.