கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் என்ன என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து,
தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் கடுமையாக பின்பற்ற மீண்டும் கடும் நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள், அணியாதவர்களை கைது செய்தால் என்ன? தடுப்பு விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபாரத தொகையை ரூபாய் 2000 ஆக உயர்த்தினால் என்ன? என கேட்டுள்ளது.