லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் நிதி நெருக்கடியை சந்தித்து வந்த லட்சுமி விலாஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அபார வளர்ச்சியை பெற்றிருந்தது. அதனை மீட்டெடுக்கும் பொருட்டு அந்த வங்கி பல முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால் எந்த முயற்சியும் கை கொடுக்காத காரணத்தால் வங்கி திவால் ஆனது. அதனால் லட்சுமி விலாஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதாவது ஊழியர்கள் மாதத்திற்கு 25 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும். அதற்கு மேல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எடுக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கி இணைத்துக்கொள்ள அரசு ஒப்புதல் வழங்கியது. லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் அனைத்தும் டிபிஎஸ் வங்கி கிளைகலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் முடிவுக்கு வந்துள்ளது.