Categories
அரசியல்

அடடே!! “லவ் யூ சார்” … வாழ்த்து மழையில் நனையும் கமல்….

கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

உலக நாயகன் என்று போற்றப்படுபவர் கமல்ஹாசன். இவர் இன்று தனது 68-வது பிறந்தநாளில் அடி எடுத்து வைத்துள்ளார். இதனால் இவருக்கு பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் முதலமைச்சர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது. தீராத கலைதாக்கத்துடன் தன்னை இன்னும் பண்படுத்தி கொல்லும்  கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான எனது அன்பு நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின்கலைத்திறம்  என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பிரபல நடிகையும்,பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தனது டுவிட்டர்  பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் எனது அன்பு நண்பரே இன்று உங்கள் பிறந்த நாளை கொண்டாடும்போது உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி என அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள். மேலும் நான் மரியாதை மற்றும் நமது அன்பின் நட்பை கொண்டாடுகின்றேன். ஐ லவ் யூ சார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் Happy Birthday Kamal Hassan/ ulaganayagan என்ற  ஹேஷ்டேக்குகளையும்  தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுடன் மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன், வெற்றி விழா உள்ளிட்ட பல படங்களில் குஷ்பூ நடித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் படம்  வெளியான போது நடிகர் கமல்ஹாசன் தோள் மீது சாய்ந்தவாறு இருக்கும் புகைப்படங்களை குஷ்பூ வெளியிட்டு இருந்தார். அதில் மை ஹீரோ, மை பிரெண்ட், மை விக்ரம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |