பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்பால் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்தது. அவரது காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
எனினும் லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். இந்நிலையில் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நாளை (பிப்ரவரி 7) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மேற்கு வங்க மாநிலத்தில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கருக்கு தேசிய அளவில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.