பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவைத் தொடர்ந்து இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உ.பி. மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் இன்னிசை குயில் என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவர் கடந்த மாதம் 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உத்தரபிரதேச அரசும் இவரின் மறைவுக்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒலிபரப்பு மந்திரி அனுராக் சிங் தாக்குர் , உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களும் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்களும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 6 நேற்றிலிருந்து பிப்ரவரி 7 இன்று வரை துக்கம் அனுசரிக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.