இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர் இவர் புகழ்பெற்ற பாடகியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவருக்கு 92 வயது ஆகிவிட்டது. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து நேற்று காலை 8.30 மணி அளவில் காலமானார். இதனைத் தொடர்ந்து லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை 6.30 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க தலைவர் மம்தா பானர்ஜி, லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அடுத்த 15 நாட்களுக்கு போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பொது இடங்களில் அவரின் பாடல்களை ஒளிபரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.