லதா மங்கேஷ்கரின் மறைவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று திங்கட்கிழமை அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறைச் செயலா்கள், காவல் மற்றும் நீதித் துறைக்கு மாநில தலைமைச் செயலா் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு ஞாயிறுக்கிழமை (பிப்…6), திங்கள்கிழமை (பிப்…7) ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வந்தது. அந்த வகையில் அந்நாளில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். மேலும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.