பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை காலமானார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் உள்ளுறுறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதோடு துக்கம் அனுசரிக்கும் விதமாக இரண்டு நாட்களுக்கு தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
20 க்கும் அதிகமான மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய லதா மங்கேஷ்கருக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் சொத்து குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. லதா மங்கேஷ்கருக்கு சுமார் ரூ.111 கோடி சொத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.