இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் இளம் வயது காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் தனது 92-ஆவது அகவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சொல்ல மறந்த இளமை வயது காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது லதா மங்கேஷ்கர் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் போட்டியில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார். இவருடைய சகோதரரான ஹரி என்பவருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் சிங் என்ற கிரிக்கெட் வீரருக்குமிடையே மிக நெருக்கமான சினேகித பழக்கம் இருந்துள்ளது.
இதனால் ராஜ் சிங் லதா மங்கேஷ்கரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லும் போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே ராஜ்ஜிற்கு இசை என்றால் ரொம்ப பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இருவரும் சில காரணங்களால் பிரிந்துவிட்டதால் இருவருக்குமிடையான காதல் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தான் லதா மங்கேஷ்கர் இறுதிவரை திருமணம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.