Categories
உலக செய்திகள்

லண்டன் தேம்ஸ் நதியில் தவறி விழுந்த சிறுவன்…. சிறுவனின் விபரம் மற்றும் புகைப்படம்…. வெளியிட்ட காவல்துறையினர்….!!

லண்டன் தேம்ஸ் நதியில் விழுந்த சிறுவனின் பெயர் மற்றும் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி லண்டன் தேம்ஸ் நதி வழியாக  பள்ளி சென்ற மாணவன் பாலத்திலிருந்து நதியை பார்த்துக்கொண்டிருந்தான். இதனிடையே எட்டி பார்த்து கொண்டிருந்த சிறுவன் திடீரென பாலத்திலிருந்து நதிக்குள் விழுந்துவிட்டான். சிறுவன் விழும் போது அலறிய சத்தம் கேட்டு பெண் ஒருவர் நதிக்குள் குதித்து தேடிய நிலையில் சிறுவனை மீட்க முடியவில்லை.அவனின் பள்ளிப் பை மட்டுமே கிடைத்தது.

இதனிடையே ஒரு வாரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இந்நிலையில் தற்போது சிறுவனின் தகவலையும், புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் சிறுவன் Ark Globe Academy in Elephant and Castle பள்ளியில் படித்து வருகிறார் என்றும் அவரின் பெயர் Zaheid Ali எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |