Categories
உலக செய்திகள்

“லண்டனை உலுக்கிய வழக்கு!”…. 13 வயது சிறுவனை தூக்கிய போலீஸ்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

லண்டனில் 46 வயது நபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மேற்கு லண்டனில் Dariusz Wolosz ( வயது 46 ) என்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலந்து நாட்டை சேர்ந்த Dariusz Wolosz-க்கும் ஆண்கள் சிலருக்கும் லண்டன் Tavistock சாலையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதால் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் Dariusz Wolosz-ன் மார்பு மற்றும் இடுப்பில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களால் தான் மரணம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு அறிக்கை வெளியானது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |