லண்டனில் மயமான பெண்ணை தேடிவரும் வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டன் பிரிஸ்டனை சேர்ந்தவர் சாரா ஈவெரார்ட் (33 வயது). இவர் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வருகின்றார்.இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் கிலபாம் பகுதியில் இருந்து பிரிஸ்ட்டனில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென மயமாகியுள்ளார். இதுகுறித்து விசாரணை செய்து வந்த காவல்துறையினர் அவர் கடைசியாக பயன்படுத்திய போனின் சிக்னல் வைத்தும், அவர் நடந்து சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் அவர் கடைசியாக பொயின்டெர்ஸ் சாலையில் இருந்து காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிகளை சுற்றி காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவர் கடைசியாக பயன்படுத்திய தொப்பி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பூங்காவையும், குடியிருப்புகளையும் சுற்றி வளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக லண்டனில் உள்ள பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவரையும், மேலும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.