லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஆர்பாட்டக்கார்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிராக Hyde Park அருகில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர்.
இதில் பல காவல்துறையினர் காயம் அடைந்திருக்கின்றனர். இணையதளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் காவல் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது. மற்றொரு காவல் அதிகாரியின் நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அந்த இரண்டு காவல் அதிகாரிகளையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் மெட் காவல் துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆக்ஸ்போர்ட் தெருவில் போராட்டம் நடந்துள்ளது. இதில் கடைக்காரர்களிடம் போராட்டக்காரர்கள் முகமூடிகளை கழற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர். அதன் பிறகு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஐந்து நபர்கள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.