லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி என்றழைக்கப்படும் ஆர்பிஐ இந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வரை லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்பப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் கல்வி போன்ற எதிர்பாராத திடீர் செலவுகளுக்காக கடன் வாங்குபவர்கள் மட்டுமே 25 ஆயிரத்துக்கும் மேல் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் லட்சுமி விலாஸ் வங்கிக்கு நவம்பர்-17 மாலை 6 மணி முதல் டிசம்பர்-16 வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக கடன் அளிப்பவர்களுக்கு மட்டும் பணம் பெரும் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கியான யெஸ் வங்கியில் வாராக்கடன் அதிகரித்ததால் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வந்ததையடுத்து யெஸ் வங்கி முழுவதையும் ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து தற்போது லட்சுமி விலாஸ் வங்கியை மத்திய அரசு தனியார் வங்கியுடன் இணைக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.