எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என சீனாவிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்த இந்தியா-சீனாயிடையே ராணுவ கமாண்டர்கள் அளவில் 6-ம் சுற்று பேச்சு அண்மையில் நடைபெற்றது. இதுகுறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராத் ஸ்ரீவத்சவா கூறியபோது ராணுவ கமாண்டர்கள் அளவில் நடந்த ஆறாவது சுற்று பேச்சில் லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றி தான் முக்கியமாக பேசப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எல்லையில் இப்போது உள்ள நிலையில் மாற்றவும் முயற்சிக்கக் கூடாது என சீனாவிடம் உறுதியாக தெரிவிக்கப்பட்டதாக அனுராத் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையேயான 7-ம் கட்ட பேச்சு வார்த்தை குறித்து விரைவில் திட்டமிடப்படும் என்று அனுராத் ஸ்ரீவத்சவா குறிப்பிட்டுள்ளார்.