Categories
உலக செய்திகள்

லடாக்கை சீனாவுக்கு கொடுத்த ட்விட்டர்…. பொங்கி எழுந்த நாடாளுமன்றம்…. மன்னிப்பு கேட்ட நிறுவனம்…!!

லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்த பிரபல நிறுவனம் இந்திய நாடாளுமன்ற குழுவிற்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள போர் நினைவிடத்தில் இருந்து நேரலையில் டுவிட்டரில் கடந்த மாதம் ஒருவர் பேசுகையில், சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை தவறுதலாக தெரிவித்துள்ளார். இதையடுத்து லடாக்கை கைப்பற்றும் நோக்கில் சீனா அடிக்கடி அந்த பகுதியில் அடிக்கடி போரில் ஈடுபட்டு வரும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த பதிவு இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்த தகவல் தொடர்பாக நாடாளுமன்ற குழு டுவிட்டர் நிறுவனம் தேசத்துரோக செயலில் ஈடுபட்டுள்ளதாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதையடுத்து சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை தவறாக பதிவிட்டதாக அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாடாளுமன்ற குழு அவர்களின் விளக்கம் போதுமானதாக இல்லை மேலும் இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்திடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அந்த குழுவின் தலைவரும், எம்.பியுமான மீனாட்சி லேகி கூறுகையில், “சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை ட்விட்டர் நிறுவனம் காண்பித்து, இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் லடாக்  மட்டுமின்றி ஜம்மு காஷ்மீரில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலலும் புவியியல் தகவலை ஆய்வு செய்து அதில் ஏதேனும் தவறு இருந்தால் வரும் 30-ஆம் தேதிக்குள் அதை சரி செய்து விடுவதாக டுவிட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |