தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில் பணியில் இருந்து வரும் வெங்கடாசலம் விதிமுறை மீறி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், நேற்று முதல் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீடு என 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர்..
இந்த சோதனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் வெங்கடாசலம் வீட்டிலிருந்து ஏற்கனவே 13.5 லட்சம் பணம், 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன மர பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது.. இதனை தொடர்ந்து இன்று அதிகாலையுடன் இந்த சோதனை நிறைவடைந்தது.
இந்த நிலையில் சோதனை முடிவில் மேலும் 3 கிலோ தங்கம், கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.. சந்தன பொருட்கள் தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.. வனத்துறையினர் அடுத்தகட்ட விசாரணை நடத்த உள்ளனர்.. அடுத்தகட்டமாக வெங்கடாசலத்தின் வங்கி லாக்கறை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாச்சலம் லஞ்சமாக பெற்றதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.