Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வோம்” வசமாக சிக்கிய அதிகாரிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டாவில் பெயர் திருத்தம் செய்வதற்காக லட்சுமி ஆன்லைன் மூலம் லால்குடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதனையடுத்து மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க லட்சுமி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது பணியில் இருந்த புள்ளம்பாடி மண்டல துணை தாசில்தார் பிரபாகரன் என்பவரும், முதுவத்தூர் கிராம நிர்வாக அதிகாரியான சதீஷ்குமார் என்பவரும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பட்டாவில் பெயர் திருத்தம் செய்து தருவோம் என கூறியுள்ளனர். இதுகுறித்து லட்சுமி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லட்சுமி பிரபாகரன் மற்றும் சதீஷ் குமார் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமார் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |