Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கிராம நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் பெரியசாமி-தனபாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 1999-ஆம் ஆண்டு அரசு சார்பில் இந்த தம்பதியினருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பெரியசாமி வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு பெரியசாமி கண்ணாகுடி கிராம நிர்வாக அதிகாரியான மலர்கொடியிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மலர்கொடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெரியசாமி திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனப் பொடி தடவிய பணத்தை பெரியசாமி மலர்கொடியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மலர்கொடியை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மலர் கொடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |