விக்ரம் திரைப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு கமல் ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.
படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய அளவில் விளம்பரம் செய்தார். ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு கமல்ஹாசன் இன்று ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். விக்ரம் படத்தில் வில்லன் வேடத்தில் சூர்யா சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படுகிறது. பரிசளித்த கமலுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இப்படி ஒரு தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது. உங்கள் ரோலக்ஸுக்கு நன்றி அண்ணா என பதிவிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.