போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்களை கைது செய்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகில் உள்ள தருவைகுளம் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வடக்கு கல்மேடு-பட்டீயூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பாண்டியாபுரம் பகுதியில் வசித்து வரும் சூர்யா என்பது தெரியவந்தது. அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாயர்புரம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஞானராஜ் என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து உடனடியாக போலீசார் மடக்கி பிடித்து அவனிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தார்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்கள்.