Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரோஜா படத்தில் நடிக்க முடியாமல் போன பிரபல நடிகை… படத்தைப் பார்த்து செருப்பால் அடித்துக் கொண்டேன்…. பேட்டியில் பேச்சு….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது பற்றி பிரபல நடிகை பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் மணிரத்தினம். இவரின் பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும். இந்தவகையில் 90களில் வெளியாகிய ரோஜா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களை கவர்ந்தது.

இப்படம் காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தையும் உள்ளடக்கி இருந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடிக்க தவற விட்டதை பற்றி நடிகை ஐஸ்வர்யா கவலைப்பட்டு உள்ளார்.  இத்திரைப்படத்தில் நடிக்க முதலில் ஐஸ்வர்யாவிடம் மணிரத்னம் கேட்டுள்ளார். ஆனால் அப்போது ஐஸ்வர்யா தெலுங்கு படத்திற்காக முன் பணம் வாங்கி விட்டதால் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாது என ஐஸ்வர்யாவின் பாட்டி கூறியுள்ளார். இதுபற்றி பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா கூறியதாவது, ரோஜாவில் நடிக்க தேதி இல்லை என தெலுங்கு திரைப்படத்தில் நடித்தேன். ஆனால் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. திரையில் ரோஜா திரைப்படத்தை பார்த்த பொழுது தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டதாக கூறி உள்ளார்.

Categories

Tech |