Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரோகித், கோலி, ராகுல்…. இந்த 3 பேரை விட….. “இவர் தான் பாகிஸ்தானை அச்சுறுத்துவார்”…. முன்னாள் வீரர் புகழாரம்.!!

இந்த வீரர் தான் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் ஆசிய கண்டத்தின் 6 அணிகள் பங்கேற்கிறது. 20 ஓவராக  நடைபெறும் இந்தப் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த இரு அணிகள் மோதும் போட்டியை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் நேரடியாக மோதுவது கிடையாது.. ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் மட்டுமே மோதுகிறது. அதனால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது..

கடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி  தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் வெற்றி பெற்று உலக கோப்பையில் முதல் முறையாக வென்று வரலாற்றை மாற்றி எழுதி விட்டது. இதனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த முறை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் வெற்றி நிச்சயம் என ரசிகர்கள் நம்புகின்றனர்.. அதே நேரத்தில் இதுவரை 7 முறை ஆசியக் கோப்பையை  வென்றிருக்கும் இந்திய அணி, கடைசியாக  2018 ஆசிய கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கிறது..

கடந்த டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்த பின் பங்கு பெற்ற அனைத்து தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று வீறுநடை போட்டுக்கொண்டு வருகிறது. எனவே வருகின்ற ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகி இருக்கிறார். அதேபோல இந்திய அணியிலும் பும்ரா விலகி இருக்கிறார். ஷஹீன் ஷா அப்ரிடி விலகியுள்ளதால் இந்தியாவின் டாப் ஆர்டரில் களம் இறங்கும் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் போன்ற வீரர்கள் தப்பித்து விட்டதாக அந்த நாட்டு வீரர்கள் வம்பு இழுத்து வருகின்றனர். அதற்கு இந்திய ரசிகர்களும் நங்கள் பும்ரா விலகும்போது எதுவுமே சொல்லவில்லை.. இதுவரையில் 2 முறை மட்டுமே கோப்பையை வாங்கிவிட்டு ஓவராக பேசுகிறீர்கள் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இரு அணிகள் மோதும் போட்டி குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம்,  ரோகித் சர்மா, கோலி கேஎல் ராகுல் ஆகியோரை விடவும் சூர்யகுமார் யாதவ் தான் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறியதாவது, ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் இருந்தாலும் சூரியகுமார் யாதவ் தான் சமீப காலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரராக இருக்கிறார்.. அபாரமான ஒரு வீரர் அவர்.. ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் நான் பயிற்சியளராக இருந்த காலத்தில் முதல்முறையாக நான் அவரைப் பார்த்தேன்.. அப்போது 7 மற்றும் 8 இடங்களில் விளையாடி அவர் ஒரு சில ஷாட்டுகளை சிறப்பாக ஆடுவார். குறிப்பாக பைன் லெக் பகுதியில் சூரியகுமார் யாதவ் பேட்டினுடைய மிடில் பகுதியில் இருந்து அடிக்கும் சாட் கடினமான ஒன்று.

 

இதையடுத்து சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக விளையாட தொடங்கியதை பார்ப்பது மிக ரசனையாக உள்ளது. சுழல் மற்றும் வேகம் என எந்த வகையான பந்துவீச்சையும் திறமையுடன் எதிர்கொண்டு சிறப்பாக ஆடுவதால் அவர் ஆபத்தான பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன். அவர் ஒருமுறை செட் ஆகிவிட்டால் 360 டிகிரியிலும் அனைத்து விதமான ஷாட்டுகளையும் அடிக்கும் திறமை பெற்றவர்” என்று புகழ்ந்துள்ளார்.

சூர்யாகுமார் யாதவ் இவர் சொல்வதைப் போலவே மிக கடுமையாக உழைத்து 30 வயதில் அறிமுகமாகி தன்னுடைய திறமையினால் இந்திய அணியில் தற்போது இடம் பிடித்திருக்கிறார். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவிற்கு அவரது செயல்பாடு இருக்கிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் எந்தவித சூழ்நிலையாக இருந்தாலும் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய திறமை பெற்றுள்ள இவர் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் மற்ற வீரர்கள் சொதப்பிய நேரத்தில் அதிரடியாக 55 பந்தில் 117 ரன்கள் விளாசி வெற்றிக்கு போராடினார். இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும் கூட அவருக்கு பாராட்டுக்கள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தது.

அதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர்களும் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக அசத்தி வருகிறார்.. வெறும் 22 போட்டிகளிலேயே தர வரிசையில் இமாலய முன்னேற்றம் கண்டு பாபர் அசாமுக்கு  அடுத்தபடியாக 2ஆவது இடத்தில் நிற்கிறார். இந்திய வீரர்கள் யாருமே டாப் 10 இடத்துக்குள் இல்லாத நிலையில் இவர் மட்டும் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது இந்திய அணிக்கு பெருமை தான்.. எனவே நிச்சயமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..

Categories

Tech |