தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் , சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழி முறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது என்பதால், தீவிர வழிமுறையை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.