இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றார்கள். இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு மன தைரியம் இல்லாததால் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். அதனை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கிருஷ்ண சமுத்திரம் பள்ளர் தெருவை சேர்ந்த சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார் இவருடைய மகள் கமலி(19). இவர் திருத்தணி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி ஏ மூன்றாம் வருடம் படித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாகவே வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி போலீஸ்காருக்கு தகவல் கிடைத்ததை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை கமலின் உடலை கைப்பற்றி வேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கமலி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் எனது சாவிற்கு யாரும் காரணம் கிடையாது எனக்கு அம்மா அப்பாவை ரொம்ப பிடிக்கும். அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என் இறப்பு பற்றி தவறாக யாரும் சித்தரிக்க வேண்டாம் என உருக்கமாக எழுதியுள்ளார். இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.