9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாக அமைச்சர் கே என் நேரு தெருவித்தார். திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணிக்காக வாங்கப்பட்டு உள்ள பல்வேறு வாகனங்களை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றதா? என கேள்வி எழுப்பினார்.
அதில் அவர், “இதை விட நேர்மையாக யாராலும் தேர்தல் நடத்த இயலாது. நாம் மிக நேர்மையாக தேர்தல் நடத்தி உள்ளோம். பின்னால் வரும் தோல்வியை எண்ணி இவ்வாறு சும்மா அதிமுக சொல்லி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் தேர்தலை நேர்மையாக நடத்தினார்களா? அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, எங்களுக்கு வந்தால் இரத்தமா? என்று கூறியுள்ளார்.