Categories
மாநில செய்திகள்

“ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கோம்” யாரோ வந்து எய்ம்ஸ் மருத்துவமனையை திருடிட்டு போயிட்டாங்க…. எம்பி மாணிக்கம் தாகூர் செம கலாய்….!!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வருகை புரிந்துள்ளார். இவர் மதுரையில் உள்ள பல்வேறு துறை சார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் கூறினார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மாணிக்கம் தாகூர், 95% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய மதுரையின் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகு நானும், எம்பி வெங்கடேசனும் ஒரு மணி நேரமாக மருத்துவ மனையை தேடிக் கொண்டிருக்கிறோம். யாரோ சிலர் வந்து கட்டிடத்தை திருடி சென்று விட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |