Categories
மாநில செய்திகள்

ரொம்ப சவாலாக இருக்கும்…! 2மாசம் உஷாரா இருங்க…. கலெக்டருக்கு பறந்த கடிதம் …!!

தமிழகத்தில் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்குவதால் பருவகால நோய்களான டெங்கு போன்ற நோய்கள் அதிக பரவ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.மேலும் உடல் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். ஏடிஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும்.

இதற்கு கண் வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, எலும்பு வலி, சாதாரண ரத்தப் போக்கு, மூட்டு வலி மற்றும் சோர்வு போன்றவை அறிகுறிகளாகும். இந்த டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொசு உற்பத்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கி விசாலமாக வீடுகள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்காக தயாராக இருக்க வேண்டும். மேலும் சுகாதார துறைக்கு அடுத்த இரண்டு மாதங்கள் சவாலானதாக இருக்கும் என்பதால் நோய்தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |