Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப ஆவலோடு காத்திருந்தோம்..! கையை மட்டும் அசைசிட்டு போயிட்டாரு… ஏமாற்றமடைந்த தொண்டர்கள்..!!

பெரம்பலூரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சார நேரம் கடந்ததால் திறந்த வேனில் நின்றவாறு கையசைத்து விட்டு சென்றார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி குன்னம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன், பெரம்பலூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து ஏப்ரல் 1-ஆம் தேதி பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜயகாந்த் வருகையை எதிர்பார்த்து இரவு 8 மணி முதலே தொண்டர்கள் திரண்டிருந்தனர். நீண்ட நேரமாக தொண்டர்கள் கால்கடுக்க காத்திருந்தனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் இரவு 11.15 மணிக்கே வருகை தந்தார். ஆனால் இரவு 10 மணி வரையே தேர்தல் விதிமுறைகளின் படி பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டு. இதனால் திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்த் பிரச்சாரம் செய்து பேசாமல் பொதுமக்களையும், கட்சி தொண்டர்களையும் பார்த்து வணங்கி, கையசைத்து விட்டு சென்றார் கட்சித் தொண்டர்கள் நேரில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்ப்பதோடு, அவருடைய பேச்சைக் கேட்பதற்கு ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் பிரச்சாரம் எதுவும் செய்யாததால் அவருடைய பேச்சை கேட்க முடியாம் ஏமாற்றம் அடைந்தனர்.

Categories

Tech |