மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தங்களது ரேஷன் அட்டையை எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மாநில அளவில் பெற்றுக்கொள்ளமுடியும். ஆதார் அட்டை ஒரு தனி மனிதனின் அடையாளம் பார்க்கப்பட்டு வருகின்றது. இப்படியிருக்க ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ரேஷன் அட்டைதாரர்களை ஒரே ஆப் மூலம் மத்திய அரசாங்கம் ஒன்றிணைத்துள்ளது.
இதன் மூலமாக ஒரே ரேஷன் கார்டுகளை கொண்டு எந்த ஒரு மாநிலத்திலும் உணவு பொருட்களை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும் தங்களது ரேஷன் கார்டை, ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். அதை எப்படி இணைப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் ஆதார் அட்டையை இணைக்க,
- முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- இப்போது Start Now என்பதைக் கிளிக் செய்க.
- இங்கே உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய தகவல்களை நிரப்ப வேண்டும்.
- பிறகு Ration Card Benefit என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- தொடர்ந்து ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
- அதை பூர்த்தி செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
- அந்த OTP ஐ உள்ளிட்டால், உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியை பெறுவீர்கள்.
- இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.
ஆப்லைனில் இணைப்பது எப்படி
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அருகில் இருக்கும் ரேஷன் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் மையத்தில் செய்து கொள்ள முடியும்.