Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுகள்…. அதிகாரிகளுக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு…..!!!

ரேஷன் அட்டைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு பறந்து வந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தனிமனிதனின் முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு உள்ளது. அத்துடன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக  இதை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஏழை,எளிய மக்கள் இதன் மூலம் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில்  பெறுகின்றனர்.

மேலும் இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் புதிதாக வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் அனைத்தும் உணவு பொருள் வழங்கல் துறையின் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலமாகவே ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும். அதன் பிறகே  பயனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற முடியும். அப்படி இல்லை என்றால் ரேஷன் கடைகளுக்கு சென்று ரேஷன் கார்டு கொடுத்தால், கைரேகை பதிவு எந்திரத்தில் பதியும்போது அந்த கார்டு  முடுக்கப்பப் பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வரும்.

அந்தவகையில் நாகை மாவட்டத்தில் உள்ள சட்டயப்பர் மேல வீதியை சேர்ந்தவர் பாஸ்கர்.இவர் பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு குடும்ப அட்டை வாங்கித் தருவது மற்றும் சான்றிதழ்கள் வாங்கித் தருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நாகை மாவட்ட வழங்கல் அலுவலர் மாதவனை தொடர்பு கொண்டு பாஸ்கர் கூறியுள்ளதாவது, நான் கொடுக்கும் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை விசாரிக்காமல் உடனே ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்று கூறி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைக் கேட்ட அலுவலர் மாதவன் அதிர்ச்சி அடைந்து, வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதைப்போல் அதே மாவட்டத்தை சேர்ந்த பனங்குடி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் உமாவை தொடர்பு கொண்டு, தனியார் டிரஸ்ட் இடத்தை தனி நபருக்கு சட்டத்திற்கு புறம்பாக பட்டா மாறுதல் செய்து தர மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நாகை தாசில்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகூர் போலீசார் பாஸ்கர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் நாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |