Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுகளில் மொபைல் எண்…. அப்டேட் செய்யணுமா….? இதை மட்டும் செஞ்சா போதும்…!!!!

ரேஷன் கார்டுகளில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது மிகவும் அவசியமாகும். 

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அரிசி, பருப்பு, கோதுமை, மளிகை பொருட்கள், எண்ணெய் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பெற்று செல்கின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் கார்டு என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.

மேலும் பல்வேறு இடங்களில் ரேஷன் கார்டு முக்கிய அடையாள ஆவணமாக ஒப்புக் கொள்ளப்படுகின்றது. இதனை தொடர்ந்து ரேஷன் அட்டையில் வீட்டு உறுப்பினர்கள் பெயர், முகவரி, குடும்பத்தலைவர் போன்ற விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். தேவை ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை நீக்கம் செய்வதும் அவசியம். அதேபோல ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது அவசியமாகும்.

தற்போது ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்க பட்டுள்ளது. இதில் மக்கள் உபயோகப்படுத்தும் தொலைபேசி எண்ணை ஆதார் அட்டையில் இணைப்பது கட்டாயமாகும். மேலும் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிக எளிதானது. இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்களை பயன்படுத்தி எளிதாக ரேஷன் கார்டில் உள்ள மொபைல் எண்ணை மாற்றலாம். அதிலிருந்தே ரேஷன் கார்டு குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கும்.

Categories

Tech |