Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டியதால் மக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர்.

 

 

மேலூர் அருகே கம்பர்  ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக  செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக  கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் விற்பனையாளர் செல்வி மற்றும் உதவியாளரிடம் கேட்கும் போது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நியாயவிலை கடைக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Categories

Tech |