தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும், அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா காலத்தில் நியாயவிலைக் கடைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. மாஸ்க் வழங்கும் பணியில் கூடுதலாக ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக கார்டு ஒன்றுக்கு தலா 50 காசுகள் என்ற வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், முகக்கவசம் வழங்கும் பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் விவரங்களை விரைவில் அனுப்பும் பணியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.