Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசின் பணியாளர்கள் குடும்ப காரணங்களுக்காக தேவைப்படும் நிதி உதவியை மாதாந்திர தவணை முறையில் அரசு வழங்கிவருகிறது. அதன்படிரேஷன் கடை ஊழியர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை செய்வதால் இவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி வருகிறது. அதன்படி சமீபத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு சங்க பணியாளர்களை போலவே ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுனருக்கு கடன், முன் பணம் தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமண முன்பணம் மற்றும் கல்வி, வாகனம், வீடு கட்டுதல் போன்ற வற்றுக்கு கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடை பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |