Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் இப்படியொரு வசதியா….. தமிழக அரசின் சூப்பரான திட்டம்….. விரைவில் அறிமுகம்….!!!!!

இனி ரேஷன் கடையிலேயே வை-பையை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இன்டர்நெட்டில் மூழ்கி உள்ளது. தற்போது இன்டர்நெட்டிலேயே அனைத்து தகவல்களும் கிடைத்து விடுகின்றது. உணவு முதல் திருமணத்திற்கான வரன் பார்ப்பது வரை எல்லாமே இன்டர்நெட் தான். இந்தியாவை பொறுத்தவரையில் நகர்ப்புறங்களில் இணைய சேவை பரவலாக உள்ளது. ஆனால் கிராமப்புறங்களிலும், மலைப் பகுதிகளிலும் இந்த சேவை சரியாக கிடைப்பது இல்லை. தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் மலை பிரதேசத்திலும் அதிவேகமான இணைய சேவையை வை-பை மூலமாக கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வைபை வசதியை முதற்கட்டமாக கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகளில் 10,000 மேற்பட்ட ரேஷன் கடைகள் பகுதிநேர கடைகளாக செயல்படுகின்றது.  சில ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றது. இதனால் இந்த கடைகள் அனைத்திலும் வைபை வசதியை கொண்டு வருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ரேஷன் கடைகளை மக்கள் இணைய சேவை மையமாக கூட பயன்படுத்தலாம்.

இது அரசின் திட்டம் என்பதால் கட்டணமும் மிக குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. wi-fi வசதியில் 5ஜி சேவைகளை தொடங்கலாம் என்று ஆலோசனையும் உள்ளது. 5ஜி சேவைகள் வந்து விட்டால் 4ஜி சேவைகளை விட அதிக அளவில் வேகமாக இணையதளங்களை பயன்படுத்த முடியும். இதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் இந்த சேவை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |