Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 6503 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி…! தமிழக அரசு அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022.

பணியிட விவரங்கள்: கோயம்புத்தூர் 233, விழுப்புரம் – 244 , விருதுநகர் – 164, புதுக்கோட்டை – 135, நாமக்கல் – 200, செங்கல்பட்டு – 178, ஈரோடு – 243, திருச்சி – 231, மதுரை – 164, ராணிப்பேட்டை – 118, திருவண்ணாமலை – 376, அரியலூர் – 75, தென்காசி – 83, திருநெல்வேலி – 98, சேலம் – 276, கரூர் – 90, தேனி – 85, சிவகங்கை – 103, தஞ்சாவூர் – 200, ராமநாதபுரம் – 114, பெரம்பலூர் – 58, கன்னியாகுமரி – 134, திருவாரூர் – 182, வேலூர் – 168, மயிலாடுதுறை – 150, திருப்பத்தூர் – 240, கள்ளக்குறிச்சி – 116, திருப்பூர் – 240 நீலகிரி – 76, சென்னை – 344, தருமபுரி – 98, நாகப்பட்டினம் – 98, திருவள்ளூர் – 237, தூத்துக்குடி – 141, கடலூர் – 245, திண்டுக்கல் – 312, காஞ்சிபுரம் – 274 ஆகும்.

Categories

Tech |