ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் இயங்கும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு குடும்ப அட்டை வைத்திருப்போரில் போரில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்குபடுத்தவே கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்கள் வாங்காவிட்டால் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம் எனவும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் பேசும் போது நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் போது சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்த கூடாது அவ்வாறு கட்டாயப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.