Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை நிறுத்தம்….. அரசு திடீர் முடிவு…!!!

இந்தியா முழுவதும் முன்னதாக பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைவானதால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். எனவே குறைந்த விலையில் மக்களுக்கு கூட்டுறவுத் துறை சார்பாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மற்றும் முக்கிய ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. விற்பனையாகாததற்கான பணத்தை ரேஷன் ஊழியர்களிடம் அதிகாரிகள் வசூலித்தனர். இதனால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. எனவே மக்களின் சிரமத்தை போக்குவதற்காக நகரங்களில் உள்ள குறிப்பிட்ட நியாய விலை கடைகளில் காய்கறிகளை விற்க கூட்டுறவுத்துறை முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விற்பனை ஆகாத காய்கறிக்கு அதிகாரிகள் பணம் வசூலிக்க மாட்டார்கள் என்று கூறினால் மட்டுமே காய்கறி விற்பனைக்கு ஒத்துளைப்போம் என்று நியாய விலை கடை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. எனவே ரேஷன் கடைகளில் இப்போதைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட மாட்டாது. ஆனால் பண்ணைப் பசுமை கடைகளில் தொடர்ந்து குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |