தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிக அளவு அரங்கேரி கொண்டிருக்கின்றன.இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக அரிசி கடத்தால் வெகுவாக குறைந்துள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடத்தால் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறை முதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதத்தில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தியதில் கடத்தலுக்கு துணை போன அரிசி ஆலைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதே சமயம் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்குகளில் இருந்து பொது விநியோக திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு,மண்ணெண்ணெய் மற்றும் பாமாயில் ஆகிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவற்றைக் கண்காணிப்பதற்கு கடந்த ஆட்சியில் பொருத்தப்பட்ட 2,869 கண்காணிப்பு கேமராக்களில் பெரும்பாலானவை சரியான முறையில் இயங்கவில்லை.எனவே பொது விநியோகத் திட்ட பொருட்கள் சரியான முறையில் ரேஷன் கடைகளுக்கு சென்றடைவதை கண்காணிக்கும் வகையில் சேமிப்பு கிடக்குகளில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களை பராமரித்து சரியான முறையில் இயங்குவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடிமை பொருட்கள் கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்க விருப்பமுள்ளவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 மூலமாக தெரியப்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.